செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை

#EXCLUSIVE: சிறையில் என்ன செய்கிறார் செந்தில் பாலாஜி..? சிறைத்துறை துணை தலைவர் பிரத்யேக பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவரின் செயல்பாடுகள் குறித்து, சிறைத்துறை துணை தலைவர் கனகராஜ் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணலை இப்போது பார்க்கலாம்.
Published on

சிறைத்துறை துணை தலைவர் கனகராஜ் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் உள்ளார். சிறையில் உள்ள எல்லா சிறைவாசிகளையும் முக்கியமானவர்களாகவே கருதுகிறோம். மக்கள் பிரதிநிதியாக சிறைக்கு வரும்போது கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

minister senthil balaji
minister senthil balajipt desk

நோயுற்ற சிறைவாசிகளுக்கான உணவை சிறை மருத்துவர் முடிவு செய்வார். செந்தில் பாலாஜிக்கு தேவையான நேரத்தில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அறுவை சிகிச்சை செய்துள்ளதால் உடல் நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொழுது போக்கிற்காக செந்தில்பாலாஜி புத்தகங்களை படிக்கும் பழக்கம் வைத்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் எடை மட்டும் சற்று குறைந்துள்ளது. சிறையில் இருப்பவர்கள் எல்லோரும் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். அந்தவகையில் அவரும் சற்று மன அழுத்தத்தில் உள்ளார்” என்றார். கூடுதல் தகவல்களை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com