\
பரிசோதனைகள் முடிவு : வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

பரிசோதனைகள் முடிவு : வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

பரிசோதனைகள் முடிவு : வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்
Published on

முழு உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் செய்திகளில் வெளியாகிய நிலையில், வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com