\
ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்

ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்

ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்
Published on

முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

அரசு முறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ்க்கு மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், “முதலமைச்சர் பழனிசாமி குறித்து ரஜினி பேசிய கருத்தினை கண்டிக்கிறேன்.  எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார். 

மேலும், “அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில் வீட்டுவசதி திட்டத்திற்காக உலக வங்கி ரூ.5,000 கோடி நிதி தர ஒப்புதல் அளித்துள்ளது” என்றும் ஓபிஎஸ் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com