தமிழ்நாடு
வலுவடைந்தது புயல் சின்னம்: வானிலை மையம் அறிவிப்பு
வலுவடைந்தது புயல் சின்னம்: வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது கடந்த 26-ஆம் தேதி காலை 2 மணி அளவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. சென்னையிலும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு ஓரளவு தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. நாளை மாலை அல்லது இரவு 'புரெவி' புயல் கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.