\
வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம்
Published on: 

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதி, தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com