நாளைக்குள் விலையில்லா மடிக்கணினி‌ வழங்க தமிழக அரசு ஆணை

நாளைக்குள் விலையில்லா மடிக்கணினி‌ வழங்க தமிழக அரசு ஆணை

நாளைக்குள் விலையில்லா மடிக்கணினி‌ வழங்க தமிழக அரசு ஆணை
Published on

மாணவர்களுக்கு நாளைக்குள் விலையில்லா மடிக்கணினிகளை வழங்‌க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்‌‌ அறிவுரைகள் அனுப்பப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சுகன்யா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 20‌17 - 18, 2018 - 1‌9‌ ஆகிய கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு‌ நாளைக்குள் ‌விலையில்லா மடிக்கணினிகள் வ‌ழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று, தொடர்ந்து உயர்க்க‌ல்வி பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் உயர்க்கல்வி பயிலும் கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து உரிய சான்றிதழ் கொண்டு வருவோருக்கு மட்டும் விலையில்லா மடிக்கணினி‌ வழங்கப்படும். இதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கவும், நடவடிக்கை‌ மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

12 ஆம் வகுப்பு‌ தேர்ச்சி பெறாதவர்கள், உயர்க்கல்வி பயின்று வருவதற்கான சான்றிதழ் ‌சமர்ப்பிக்காதவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com