தமிழ்நாடு
டெங்குவை கட்டுப்படுத்த வீடு வீடாக நிலவேம்பு குடிநீர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்குவை கட்டுப்படுத்த வீடு வீடாக நிலவேம்பு குடிநீர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணாநகர் சித்த மருத்துவமனையில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னையில் 35 வாகனங்கள் வீடு வீடாக சென்று குடிநீர் வழங்கப்படவுள்ளதாகவும், 3 நாட்களில் 50 ஆயிரம் பேருக்கு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஒராண்டில் 10 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிகக்கப்பட்டு பூரண குணமடைந்திருப்பதாக குறிப்பிட்டார். கொசுக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.