தமிழ்நாடு
ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு
ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு
சேலம், நெல்லை மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 25 வயதான கிருஷ்ணவேணி என்பவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் நாகை மாவட்டத்தில் மேலும் ஒருவர் டெங்குவுக்கு உயிரிழந்தார். சேலம், நெல்லை மாவட்டத்தில் தலா ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று காய்ச்சல் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 27 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.