தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சடலத்துடன் அலைந்த பேரன்

தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சடலத்துடன் அலைந்த பேரன்

தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சடலத்துடன் அலைந்த பேரன்
Published on

திருச்சி மாவட்டத்தில் இறந்த மூதாட்டியின் உ‌டலை தகனம் செய்‌ய இடம் கிடைக்காமல் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் பேரன் அலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சியில் வசித்துவந்தவர் மேரியம்மாள். இவர் திடீரென உயிரிழந்ததையடுத்து, அவரது பேரன் முருகேசன் தள்ளுவண்டியில் பாட்டியின் உடலை வைத்துக் கொண்டு தகனம் செய்ய இடம் தேடி அலைந்திருக்கிறார். யாரும் இடம் கொடுக்க முன் வராத நிலையில் வள்ளிவாயல் சுடுகாட்டில் கரும்பு சருக்கைகளை கொண்டு பாட்டியின் சடலத்தை முருகேசன் எரித்துள்ளார்.

சந்தேகமடைந்த கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் லால்குடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தள்ளுவண்டியுடன் முருகேசனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து காவலர்கள் பாதி எரிந்த ‌நிலையில் இருந்த உடலை முழுமையாக தகனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com