கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணிமுத்தாறில் இன்று நடக்க இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி, குதிரை பந்தயம், மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கடையூரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெறுகின்றன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் சின்னவீரன்பட்டியில் ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணிமுத்தாறில் இன்று நடக்க இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறாததால் மாவட்ட நிர்வாகம் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுத்துள்ளது.