செல்லூர் ராஜு
செல்லூர் ராஜுNGMPC059

சிவகங்கை | தன்னை காரில் ஏற்ற மறுத்தாரா இபிஎஸ்? வைரலான வீடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜூவை காரில் ஏற்ற மறுத்ததாக வீடியோ பரவிய விவகாரத்தில், மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்த காரணத்தால் காரில் ஏற்றவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக நடந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புதியதலைமுறைக்கு விளக்கம்.
Published on

“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்ட வாரியாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

புதிய தலைமுறை News card
புதிய தலைமுறை News cardinstagram

இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாசி சிவகங்கைக்கு வரும் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காரில் செல்லூர் ராஜூ ஏற முயன்ற போது அவரை ஏற வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோ குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விளக்கம் கேட்ட போது,

”எடப்பாடி பழனிசாமிக்கு Y பிரிவில் இருந்து Z பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்வு நடந்தது. பாதுகாவலர்கள் இருந்ததால் அடுத்த காரில் ஏறி சென்றேன்” என்று செல்லூர் ராஜூ விளக்கமளித்தார்.

செல்லூர் ராஜு
தொப்பியால் வந்த சோதனை! அவுட்டா? நாட் அவுட்டா? என கிளப்பிய விவாதம்! விதிகள் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com