\
முதல்வர் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்

முதல்வர் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்

முதல்வர் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்
Published on

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சுகாதார துறை செயலாளர் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் காப்பீடு உண்டு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நோயாளிகளை சேர்க்க இடமில்லாமல் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது என்ற புகார் தவறானது என்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com