டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்..
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழப்புகள் நேர்ந்து வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
1. 2 நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது.
2. காய்ச்சலில் போது வாய்ப்பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது.
3. கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.
4. காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படுவது.
5. குளிர், தலைவலி, கண்களை நகர்த்தும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி
6. இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம்.
7. கால்களிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியுடன் காய்ச்சல்
தடுக்கும் வழிமுறைகள்:
1. பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்ட் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
2. சுத்தமான தண்ணீரில் மட்டுமே டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஈஜிப்ட் கொசுக்கள் உருவாகின்றன.
3. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு:
1. டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.
2. போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
3. மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள கூடாது.