\
டெங்கு காய்ச்சலுக்கு 5ஆம் வகுப்பு மாணவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 5ஆம் வகுப்பு மாணவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு 5ஆம் வகுப்பு மாணவன் பலி
Published on

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். 

கேசவன்பாளையத்தில் வசிக்கும் இளையராஜாவின் மகன்கள் யோகேஷ் மற்றும் பிரகாஷ். இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு அங்கு டெங்கு அறிகுறி இருப்‌பதாகக் கண்டறியப்பட்ட நிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பிரகாஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், யோகேஷிற்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி யோகேஷ் இன்று அதிகாலை உயிரிழந்தான். 

சுனாமிக்கு பாதிப்பிற்கு பிறகு தொண்டு நிறுவனங்களால் இப்பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உள்ளதால், மழைநீர் தேங்கா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com