தமிழ்நாடு
டெங்கு கட்டுக்குள் உள்ளது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து
டெங்கு கட்டுக்குள் உள்ளது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணர்வை தொடர்ந்து அரசு வழங்கி வருவதாக கூறினார். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவரும் என்றார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என கூறினார். டெங்கு காய்ச்சல் இறப்பு குறித்து தவறான புள்ளி விவரங்களை சிலர் தெரிவிப்பதாகவும், தமிழக அரசு சரியான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.