டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: லார்வா புழுக்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் தீவிரம்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: லார்வா புழுக்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் தீவிரம்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: லார்வா புழுக்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் தீவிரம்
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பள்ளிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லார்வா புழுக்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாகவும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுத்து காய்ச்சல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சீர்காழி சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வுசெய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகங்களைச் சுற்றி பழைய டயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீ கப்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டும் பிளீச்சிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.
மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்த பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்துச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com