\
டெங்கு காய்ச்ச்சல்
டெங்கு காய்ச்ச்சல்file photo

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. ஒரே நாளில் 332 பேருக்கு டெங்கு உறுதி!

கடந்தாண்டின் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தற்போதே கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து, ஒரே நாளில் 332 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஒரேநாளில் 332 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 70 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு
டெங்குஎக்ஸ் தளம்

கடந்தாண்டு 25 ஆயிரத்து 585 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் முடிவதற்குள் 25 ஆயிரத்து 481 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில்கொண்டு, போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

டெங்கு காய்ச்ச்சல்
”டெங்கு அதிகரிக்க தவெக காரணம்” - மேயர் பிரியா குற்றச்சாட்டு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com