தமிழக ஆளுநர் ரவி வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் ஆர்ப்பாட்டம் தொடரும்- ஜி. ராமகிருஷ்ணன்

தமிழக ஆளுநர் ரவி வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் ஆர்ப்பாட்டம் தொடரும்- ஜி. ராமகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் ரவி வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் ஆர்ப்பாட்டம் தொடரும்- ஜி. ராமகிருஷ்ணன்

"தமிழக ஆளுநர் ரவி வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

காரல் மார்க்சை அவமதித்தும், மார்க்சியத்தை கொச்சைப்படுத்தியும் அவதூறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும், இழிவாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டக்குழு செயலாளர்கள், அக்கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸ் மற்றும் டார்வினை கடுமையாக விமர்சித்து அவதூறாக ஆளுநர் பேசியுள்ளார், அரைகுறைவாக புரிந்து கொண்டு பேசிய ஆளுநருக்கு நாங்கள் அறிவுபூர்வமாக பதிலளிக்க உள்ளோம் ”என்று கூறிய அவர் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இன்று கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடலை பாடி காண்பித்தார்.

மேலும் பேசிய அவர்” ஆளுநர் காரல் மார்க்சை விமர்சித்து பேசி இருக்கிறார், அறிவியலாளர் சார்லஸ் டார்வினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்றும் அவருக்கு மாக்ஸ் மற்றும் டார்வினை பற்றி ஒன்னும் தெரியாது அவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் என்றும் ஆளுநரின் சட்டையை கழட்டி விட்டு அவர் ஆர்எஸ்எஸ் காரனாக பேசட்டும்” என்று கூறிய அவர்” ஆளுநர் ரவி தப்பு தப்பாக பேசுவதாகவும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸுக்கு என்ன பங்கு உள்ளது ?”என்று கேள்வி எழுப்பிய அவர் “ ஆர்எஸ்எஸ் பிஜேபி தொண்டர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்ற வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ”இளையோருக்கு மார்க்ஸ் கதை என்ற புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம், அப்போதாவது காரல் மார்க்சை பற்றி ஆளுநர் ரவி தெரிந்து கொள்ளட்டும்” என்று கூறிய அவர் ”ஆளுநராக இருக்க வேண்டுமே தவிர அரைவேக்காடு அரசியல்வாதியாக இருக்கக் கூடாது” என்று விமர்சனம் செய்தார்.

மேலும் பேசிய அவர்” மார்க்சியத்தை எவ்வளவு பேர் விமர்சனம் செய்துள்ளனர், ஆனால் உலகத்தில் எவ்வளவு தத்துவங்கள் தோன்றினாலும் மார்கிஷயம் தான் அதில் முதலான தத்துவம் என்று பலரும் ஒப்புக் கொண்டு உள்ளதாகவும், விடுதலைப் போராட்டத்தில் காட்டி கொடுத்த அமைப்பு ஆர் எஸ் எஸ் என்றும் நாங்கள் பிரிட்டிஷுக்கு சேவை செய்கிறோம் என்று எழுதிக் கொடுத்தவர்தான் சாவர்க்கர் எனவும் மார்க்சை பற்றி பேச ஆளுநர் ரவிக்கு அருகதை கிடையாது என்றும் தமிழகத்தில் எந்த மூளைக்கும் ஆளுநர் ரவி போனாலும் எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காமிக்கப்படும் ”என்று எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com