மியான்மர் அரசை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களை படுகொலை செய்யும் மியான்மர் அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஹத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளனர். ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு ஆதரவாக பல்வேறு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் பல்வேறு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மியான்மர் அரசை கண்டித்து தவ்ஹித் ஜமாஹத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மியான்மர் நாட்டில் இருந்து முஸ்லீம்கள் வெளியேறுவதை ஐ.நா சபை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.