\
rahul gandhi
rahul gandhirahulgandhi.in

தொகுதி மறுவரையறை மசோதா: மாநில கட்சிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மாநில கட்சிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்துக்கு ஆபத்து என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில கட்சிகள் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மசோதா நிறைவேறினால் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என குற்றம் சாட்டினார்.

தொகுதி மறுவரையறைக்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்திய ஜனநாயகத்தைக் கொலை செய்யும் செயல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இண்டியா கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் இந்தியாவைப் பற்றிச் சிந்தித்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சரத் பவார் கட்சி மசோதாவுக்கு ஆதரவளித்தாலும், இண்டியா கூட்டணியில் அதன் நிலைப்பாடு மாறாது எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முக ஸ்டாலின் எதிர்ப்பு
தொகுதி மறுவரையறை மசோதா - ஸ்டாலின்ai / dmk

மாநில கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் அவர், உண்மையில், மக்களவையின் தொகுதிகளை 850ஆக அதிகரிப்பது, நாட்டில் உள்ள தொகுதிகளை மாற்றியமைக்க பாஜகவுக்கு முழு சுதந்திரம் வழங்குவதற்கு சமம் என தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேறினால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் மோடிக்குச் சாதகமான முறையில் தொகுதி எல்லைகளை வரையறுப்பார் என குற்றஞ்சாட்டியுள்ள ராகுல், வாக்குப்பதிவு நடைபெறும் முன்பே தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

rahul gandhi
அமித்ஷாவிடம் பேசியது என்ன? திமுக எம்.பி. கனிமொழி விளக்கம்!!