\
தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி

தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி

தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி
Published on

டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 25 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர்‌. பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய அவர்கள் மீது, டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com