\
தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்pt

‘பிரதமருக்கு மிரட்டல்’ - தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Published on

சென்னையை அடுத்த பம்மலில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். மேலும், பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் அவர் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

தா.மோ.அன்பரசன்
“அமைச்சர் பதவியில் உள்ளதால் மட்டும்தான்...” - மிரட்டும் தொனியில் பேசிய தா.மோ.அன்பரசன்

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்திய ரஞ்சன் ஸ்வைன் என்பவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்தார். அதில், பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தா.மோ.அன்பரசன்
பதவியேற்புக்கு காத்திருக்கும் பொன்முடி... டெல்லி புறப்பட்ட ஆளுநர் RN ரவி... காரணம் இதுதானா?!

இதனையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், வெறுக்கத்தக்க பேச்சின் மூலம் வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com