டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வருகிறது டெல்லி போலீஸ்
Published on

டெல்லியில் தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றனர்.

அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சுகேஷ் என்ற தரகரிடம் தினகரன் தரப்பில் லஞ்சம் அளிக்கப்பட்டதாக டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் இன்று மாலை கிளம்பி இரவு சென்னை வருகின்றனர். அப்போது அவர்கள் சுகேஷ் சந்திரசேகரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரக்கூடும் எனத் தெரிகிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com