தினகரனை நாளை சென்னை அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை விசாரணைக்காக டெல்லி போலீஸ் நாளை சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை நாளை சென்னை அழைத்து வந்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் பணப்பரிமாற்றம் குறித்து கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களிலும் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.