`பட்டாசு விற்க, வெடிக்க, தயாரிக்க எல்லாத்துக்கும் தடை’-புத்தாண்டு வரை தொடர் கட்டுப்பாடுகள்

`பட்டாசு விற்க, வெடிக்க, தயாரிக்க எல்லாத்துக்கும் தடை’-புத்தாண்டு வரை தொடர் கட்டுப்பாடுகள்
`பட்டாசு விற்க, வெடிக்க, தயாரிக்க எல்லாத்துக்கும் தடை’-புத்தாண்டு வரை தொடர் கட்டுப்பாடுகள்

டெல்லியில் பட்டாசுகள் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க விதிக்கப்பட்ட தடையை 2023 ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது டெல்லி அரசு.

இது தொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ள செய்தியில், `கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் காற்று மாசுபாட்டில் இருந்து டெல்லி மக்களை பாதுகாக்க டெல்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விற்பனை செய்ய மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் உயிர் பாதுகாக்கப்படும். ஆன்லைன் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் தடை உத்தரவு பொருந்தும்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த தடை உத்தரவு 2023 ஜனவரி 1ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் உத்தரவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க டெல்லி காவல்துறை, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கடுமையாக காற்று மாசு நிறைந்த நகரங்களில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவும்; குறிப்பாக தீபாவளி பண்டிகை, தசரா பண்டிகையின் போது வெடிக்கப்படும் வெடிபொருட்களினால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com