இ-பதிவு முறையில் ‘திருமணம்’ என்ற பிரிவை நீக்கியது தமிழக அரசு

இ-பதிவு முறையில் ‘திருமணம்’ என்ற பிரிவை நீக்கியது தமிழக அரசு

இ-பதிவு முறையில் ‘திருமணம்’ என்ற பிரிவை நீக்கியது தமிழக அரசு
Published on

இ-பதிவு முறையில் ‘திருமணம்’ என்ற பிரிவை தமிழக அரசு நீக்கியுள்ளது. பலரும் தவறாக பயன்படுத்தி விண்ணப்பித்ததாலும், அதிக மக்கள் வெளியே வரக்கூடிய சூழல் இருப்பதாலும் இ- பதிவில் 'திருமணம்'என்ற பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு வெளியே செல்லவும் இ-பதிவு முறை கட்டாயமாகிறது. கொரோனா 2-ஆவது அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை சிலர் கடைபிடிக்க தவறியதால் அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு, மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், பயணத்துக்கான காரணப் பிரிவுகளில் இப்போது திருமண நிகழ்வு நீக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களைக் கொண்டு திருமணம் என்று கூறி பலரும் விண்ணப்பிப்பதே இதற்கு காரணம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com