தமிழ்நாடு
“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு, சுற்றுச் சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் கருத்துக்களை கேட்காமல் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசு உள்ளிட்ட காவிரி நீர் பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.