ப்ளஸ்-2வில் தோல்வியா? கால் பண்ணுங்க.. கவலையை விடுங்க!

ப்ளஸ்-2வில் தோல்வியா? கால் பண்ணுங்க.. கவலையை விடுங்க!

ப்ளஸ்-2வில் தோல்வியா? கால் பண்ணுங்க.. கவலையை விடுங்க!
Published on

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் 7.99 சதவிகிதம் பேர் தோல்வியை தழுவினர். இந்த நிலையில் அவர்கள் எமோஷனல் முடிவுகள் எடுக்காமல் எதார்த்தமாக இருக்க உதவி என்னை அறிவித்து இருக்கிறது ஒரு தொண்டு நிறுவனம்.

தேர்வு முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் அதனை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்த அரசு சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும், தேர்வு முடிவுகள் வெளியாகும் போது எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லையென்றாலோ, தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருந்தால் இதனை முற்றிலும் தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.

தேர்வு முடிவுகளை இயல்பாகவே தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் தவறான முடிவு எடுக்கக் கூடாது. பெற்றோர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. சுற்றத்தாரும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் உளவியல் ஆலோசகர்கள். இதனிடையே, மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசும், சில தன்னார்வு அமைப்புகளும் இலவச தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன. 1098 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் உதவி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com