’நாங்கள் செய்தால் கைது.. அவர்கள் செய்தால் வழக்குப்பதிவா?’ - பெரியார் ஆதரவாளர்கள் புகார்

’நாங்கள் செய்தால் கைது.. அவர்கள் செய்தால் வழக்குப்பதிவா?’ - பெரியார் ஆதரவாளர்கள் புகார்

’நாங்கள் செய்தால் கைது.. அவர்கள் செய்தால் வழக்குப்பதிவா?’ - பெரியார் ஆதரவாளர்கள் புகார்
Published on

கோவையில் பிரதமர் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரியார் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியை குறித்தும், கந்த சஷ்டி பாடல் குறித்தும்  அவதூறாக பதிவிட்டுள்ளதாக இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சண்முகநாதன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட திருவாய் சண்முகநாதன், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாணவர் அமைப்பான சுயமரியாதை இயக்கத்தின் அன்னூர் ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் தற்போது  அதேபோல், “ஹேர் லைன்ஸ் நந்தா” என்ற முகநூல் பெயரில் உள்ள நந்தா என்பவர் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பெரியார் திராவிடக்கழகத்தைச் சேர்ந்த கோபாலாகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மேற்குறிப்பிட்ட அதே பிரிவுகளில் நந்தா மீது  அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த புகாரின் மீது சமமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெரியார் ஆதரவாளர்கள் அன்னூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com