அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலினை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது - நீதிமனறம்

அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலினை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது - நீதிமனறம்
அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலினை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது - நீதிமனறம்

அவதூறு வழக்கு விசாரணைக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராகுமாறு நிர்பந்திக்கக் கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறும் என அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்பப்பெறும் முன், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் நிர்பந்திக்கக் கூடாது என்ற நீதிபதி, மனு மீது அக்டோபர் 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com