தீபாவளி சிறப்பு விற்பனை: ஆடை வாங்கினால் ஆடு பரிசு - துணிக்கடையில் குவிந்த மக்கள்!

தீபாவளி சிறப்பு விற்பனை: ஆடை வாங்கினால் ஆடு பரிசு - துணிக்கடையில் குவிந்த மக்கள்!
தீபாவளி சிறப்பு விற்பனை: ஆடை வாங்கினால் ஆடு பரிசு - துணிக்கடையில் குவிந்த மக்கள்!

திருவாரூரில் வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆடை எடுத்தால் ஆடு பரிசு என அதிரடியாக விளம்பரம் செய்துள்ள துணிக்கடையில் மக்கள் குவிந்தனர். 

வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது துணிக்கடைகள் மற்றும் வெடிக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நியூ சாரதாஸ் துணிக்கடையில் ஒரு வித்தியாசமான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் தங்க நாணயம், ஆட்டுக்கிடாய் மற்றும் 25 பட்டுப்புடவைகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆடைக்கு ஆடு என்ற விளம்பரம் ஆரூரில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அங்கு குவிந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com