\
தீபாவளிக்காக ஒரு லட்சத்து ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளிக்காக ஒரு லட்சத்து ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளிக்காக ஒரு லட்சத்து ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, வேலை, படிப்பு, பிசினஸ் போன்ற காரணங்களுக்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள், சொந்த ஊர் செல்வது வழக்கம். அவர்கள் பயணம் செய்ய ஏதுவாக, இந்த ஆண்டு,  சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள், சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டன. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வழிகாட்டும் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com