சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா

சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா

சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா
Published on

சசிகலாவைக் கண்டு தனக்கு பயம் இல்லை எனவும், அவர் அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தாலும் இதனை ஏற்று கொள்ள முடியாது என கூறினார். மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது எனவும் தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உடன் 33 வருடங்களாக இருந்தது, முதலமைச்சராவதற்கான தகுதி அல்ல என கூறிய தீபா, ஜெயலலிதா விட்டு

சென்ற பணியைத் தொடர வேண்டும் என தொண்டர்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.சசிகலா முதலமைச்சரானால் தமிழகத்தில் நிலையற்ற தன்மை ஏற்படும். புதிய தலைவர் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது என்ற தீபா, மக்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவித்தார். தனக்கு நிறைய தடைகள் வருவதாகக் கூறிய அவர், சசிகலாவை கண்டு தனக்கு எந்த பயமும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com