தமிழ்நாடு
அரசியல் பணி.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் தீபா
அரசியல் பணி.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் தீபா
தனது அரசியல் பணி குறித்து இன்று முக்கிய முடிவை வெளியிடப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில், ஆதரவாளர்களிடம் தீபா பேசினார். அப்போது, ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடம் இருந்தும் தன்னை அரசியலில் ஈடுபடுமாறு கோரிக்கைகள் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். பொதுவாழ்வில் ஈடுபடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இன்று அதுகுறித்து முக்கிய முடிவை அறிவிப்பதாகவும் தீபா கூறியுள்ளார்.