\
18 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் : நாளை புதுவை - சென்னை இடையே கரையை கடக்கும்

18 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் : நாளை புதுவை - சென்னை இடையே கரையை கடக்கும்

18 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் : நாளை புதுவை - சென்னை இடையே கரையை கடக்கும்
Published on

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுவை இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. 

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை அதிகாலை புதுவை - சென்னை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com