சின்ன வெங்காய விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை.
போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்திருந்தனர்.
ஆனால் தற்பொது குறுகிய காலத்தில் பலன் தரும் சின்ன வெங்காய சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் வெங்காய சாகுபடி செய்தால் 70 நாட்களில் பலன் தந்துவிடும். இந்நிலையில் தற்பொது பெய்து வரும் மழையின் காரணமாக விளைச்சல் அதிகரித்து விலை குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது கிலோ 1க்கு 10ரூ முதல் 15ரூ வரைவிலை போவதால் விவசாயிகள் செலவழித்த தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.