“இபிஎஸ் சொல்லும் ஓட்டு கணக்கில் சந்தேகம் இருக்கிறது; காரணம்..” - சுவாமிநாதன் சொன்ன முக்கிய விஷயம்
செய்தியாளர் - செ.வாசு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடியது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை முன்னெடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“பொற்கால ஆட்சியை வழங்கியது அதிமுக”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எனக்கு முன் பேசியவர்கள் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்து தெளிவாக பேசினார்கள்., திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டுமென்பதற்காகத்தான் எம் ஜி ஆர் அதிமுகவை தொடங்கினார்கள். அதன்பின் அம்மா பல்வேறு சோதனைகளைத் தாங்கி கழகத்தை கட்டிக்காத்தார்கள். பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டுவந்தார்கள் நமது இருபெரும் தலைவர்கள்.
ஆட்சியில் இருக்கும்போதும் ஊடகத்தினர் நம்மை விமர்சனம் செய்தார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மைத்தான் விமர்சிக்கிறார்கள். அதிமுக இருப்பதால்தான் ஊடகங்கள் இயங்கிக்கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை. நம்மையும் நாட்டு மக்களையும்தான் வாரிசாகப் பார்த்தார்கள். எண்ணெற்ற திட்டங்களை அவர்கள் கொடுத்ததால்தான் இன்றும் அதிமுகவை யாராலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை.
"சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகள் வெற்றி இலக்கு"
சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற்காக நம்முடன் இருந்தவர்களே எதிரிகளோடு கைகோர்த்து சோதனையை உருவாக்கினார்கள். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தபோது தற்போதைய முதலமைச்சரும் அவரது சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்துகொண்டார் என்பதை தொலைக்காட்சியில் தெரிந்திருக்கும். அதையெல்லாம் கடந்து நாம் வெற்றி பெற்றோம். அதை பொறுத்துகொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தவர்தான் ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்போது ஸ்டாலின் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.
பல்வேறு சதித்திட்டங்களைத் தாண்டி ஆட்சி அமைத்தோம். இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம் ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை. அத்தகைய ஆட்சியை கொடுத்தது அதிமுக. அதிமுக – பாஜக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். அதைத்தாண்டி எதாவது ஆட்சியில் குறை சொல்ல முடிந்ததா? பொற்கால ஆட்சியை கொடுத்தது அதிமுக அரசு. அதே ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வர நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து பத்திரிகையாளர் சுவாமிநாதன் விரிவாக விளக்கினார்.
அவர், "எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியிருக்கக்கூடிய சபையில், அவர் 210 இடம் வெற்றி பெறுவோம் என பேசுவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் முதலில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும், அதாவது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடர்ந்து 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறார் அல்லவா அதை போல் பத்து இடங்கள் அதிகரித்து 210 என்று கூறுவது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் வார்த்தை.
”டிடிவி தினகரன், ஓபிஎஸ் வாங்கிய ஓட்டுகள் எந்த கணக்கில் வரும்..”
நாடாளுமன்ற கணக்கு வேற மற்றும் சட்டமன்ற கணக்கு வேற, அதில் 75 தொகுதி வெற்றி பெற்றோம், இதில் 84 தொகுதி வெற்றி பெற்றோம் என 210 தொகுதிக்கு கணக்கு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமான கணக்கையே அமைத்துக் கொண்டு சொல்கிறார். அதில் கேள்விகளும், சந்தேகங்களும் எனக்கு இருக்கு. ரெம்ப முக்கியமா ’2021 சட்டமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகளால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம், சரியாக சொல்லப்போனால் 43 தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தியல் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்’ என்றார். அதற்கு காரணம் டி.டி.வி தினகரன் 21 தொகுதியில் ஓட்டைப் பிரித்தார். இப்போ பாஜக கூட்டணி ஓட்டையும் எடுத்துக் கொள்கிறார்கள்.
பின்னர் பிஜேபி கூட்டணின் ஒரு அங்கமாக இருந்தவர் பன்னிர்செல்வம், டி டி வி தினகரன் இந்த இருவரின் நிலை என என்று தெரியவிலை. தேமுதிக உங்களிடம் கூட்டணியில் வருகிறதா? அதுவும் தெரியவில்லை. இன்னம் பேசிட்டுதான் இருக்கீங்க. பிறகு எங்களோட பலம் என்று சொல்வது எது. நாடாளுமன்ற தேர்தலின்படி அதிமுக மற்றும் பிஜேபி 41.3 % வாக்குக: எடுத்துள்ளது என்கிறார். நல்ல வாக்குகள் தான், ஆனால் விஜய் என்னும் சத்தி இந்தத் தேர்தலில் வரப்போ அந்த வாக்குகள் பிரியும். அந்த கணக்கில் தான் பிழை இருக்கிறது. விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை, தவெக, திமுக இடையில் தான் போட்டி என்று சொல்லி வருகிறார் மற்றும் எம் ஜி யார் உரிமையே எடுத்துகிறார் இதற்கு எந்த விமர்சனமும், பதிலும் கொடுக்கவில்லை " என்றார்.
”ஒலித்த வார்த்தைகளை பார்த்தால்.. பலவீனமா தான் பார்க்கிறேன்”
மேலும் சுவாமிநாதன், “இணைப்பு, ஒருங்கிணைப்பு, சமரசம் இது போன்ற வார்த்தைகள் பார்க்கமுடியவில்லை. தூரோகிகள், அரசியல் புரோக்கர்கள், உறவாடி கெடுப்பவர்கள் இந்த மாறி சொற்களைதான் பார்க்கமுடிந்தது. மற்றும் தேர்தல் கணக்கில் இது பலம் தருமா? நிச்சியமா பலவீனமா தான் பார்க்கிறேன். அவர் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அதை நம்ம பாக்குறப்போ அது தவறாக தெரிகிறது. ஆனால் அவரோட பார்வையில் இவர்கள் இல்லாமல் வெற்றி பெறுவதற்கு வியூகங்கள் வகுத்திருக்கலாம். இன்று இந்த பொதுக்குழுவில் எல்லாம் அதிகாரமும் எடப்பாடி பழனிச்சாமி கையில் குடுத்திருக்கிறது " என்று கூறினார் பத்திரிகையாளர் சுவாமிநாதன்.

