\
"கொரோனா பாதிப்பு குறைவது நிம்மதியளிக்கிறது" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனா பாதிப்பு குறைவது நிம்மதியளிக்கிறது" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

"கொரோனா பாதிப்பு குறைவது நிம்மதியளிக்கிறது" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on: 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதி அளிப்பதாக மருத்துவத்துறையின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகளைப் பெற்று உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டுமென விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பதே தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு எனக்கூறிய அவர், இவ்விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com