இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்; முதல் நாளிலேயே காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதல் நாளிலேயே காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம்
காவிரி விவகாரம் முகநூல்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதல் நாளிலேயே காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்முகநூல்

சமீபத்தில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரியில் 3 ஆயிரம் கனஅடி நீர் வீதம் 18 நாட்களுக்கு கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என கூறி அம்மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இந்நிலையில்தான் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com