\
ஃபாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு

ஃபாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு

ஃபாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு
Published on

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாக ஆலையில் நிர்வாகிகளை மாற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் கூறியதால் பலரும் போராட்டத்தை கைவிட்டனர். தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளில் குறைபாடு கண்டறியப்பட்ட நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com