செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு

செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து காலை 8 மணி முதல் விநாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில் அதனை 3,000ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 5,900 கனஅடியாக இருந்த நிலையில், அது 6,000 கன அடியாக உயர்ந்துள்ளது.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7-ம் தேதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. முதலில் 250 கன அடி நீர் திறந்து விடப்பட்டு பின்னர் மழையால் நீர்வரத்து காரணமாக படிப்படியாக 2000 அடி வரை உயர்த்தப்பட்டது. பின்பு மழை ஓய்ந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்ததை அடுத்து கடந்த மூன்று தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 5,900 கன அடி நீர் வரத்தும், ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தற்போது நீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடி நீரில் 2,890 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் 24 அடி நீர்மட்ட உயர்வில் தற்போது 21.13 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 20 நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com