முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மானியக்கோரிக்கை மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்திற்குப் பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேச உள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, விசாரணைக் கைதிகள் மரணம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளது. இவைதவிர, சில சட்ட முன்வடிவுகளை அமைச்சர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் சட்ட முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்ய இருக்கிறார்.