\
20ம் தேதி முதல் 23 வரை பட்ஜெட் மீது விவாதம்: சபாநாயகர் தனபால்

20ம் தேதி முதல் 23 வரை பட்ஜெட் மீது விவாதம்: சபாநாயகர் தனபால்

20ம் தேதி முதல் 23 வரை பட்ஜெட் மீது விவாதம்: சபாநாயகர் தனபால்
Published on: 

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 20ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் பேரவையில் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டப்பேரவை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், மார்ச் 20-லிருந்து மார்ச் 24 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்த நாட்களில் சட்டப்பேரவை அலுவல்கள் வழக்கம்போல 10 மணிக்கு தொடங்கும் என கூறினார். பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 20 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 24-ஆம் தேதி நிதியமைச்சர் ஜெயக்குமார் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார் எனவும் தனபால் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com