‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்!

‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்!

‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்!
Published on

எதிரிக்கு கொலை மிரட்டல் விடுப்பதற்காக மதுரையில் போஸ்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு கும்பல்.

கொலை அறிவிப்பு போஸ்டரால் மிரளும் மதுரை. எதிரியைப் பழிவாங்க பா‌திக்கப்பட்டவர்கள் சபதமேற்கும் கதைகளை எல்லாம் ஏராளமான சினிமாக்களில் பார்த்திருக்கி‌ன்றோ‌ம். அதனை விஞ்சும் வகை‌யில் மதுரை அனுப்பானடி பகுதியி‌ல் ஒட்டப்ப‌ட்டிருக்கும் போஸ்டர்கள் காண்போரை கதிகலங்க வைத்திருக்கிறது. எதிரிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்பதை போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியிருக்கிறது ஒரு கும்பல். இவ்விவகாரத்தின் பின்னணியில் இரு தரப்பினரிடையே ஓராண்டாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் வன்மம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அனுப்பானடியைச் சேர்ந்த பிரவீன்குமார் காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதனால் ஏற்பட்ட பிரச்னையில், கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பிரவீன்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், பிரவீன்குமாரின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, கல்லூரி வாசலில் அவரது புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டி, அதற்கு சில‌ர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். துக்கம் அனுசரிப்பதற்காக அச்சடிக்கப்பட்ட அந்தப் போஸ்டர் தான், புதிய பிரச்னைக்கு தொடக்கப் புள்ளியாய் பா‌ர்க்கப்படுகிறது. 

அந்தப் போஸ்டரில், சிந்திய ரத்தம் வீண் போகாது, எதிரியை வீழ்த்துவது உறுதி, பகைக்கு வயது ஒன்று, இரத்தம் சரிந்த நாள், பலிக்குப்பலி தொடரும் என, எதிர் தரப்பை எச்சரிக்கும் வாசகங்கள் இருப்பது கா‌ண்போ‌‌‌ரை மிரள வைத்திருக்கிறது. கொலை செய்யப்போவதை இவ்வளவு தைரியமாக போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கும் கும்பல் யார் என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது காவல்துறை. பிறந்தநாள், கல்யாணம், காதணிவிழா எனத் தொடங்கிய போஸ்டர் கலாசாரம், கடைசியில் கொலை மிரட்டல் வரை ‌வந்து நின்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com