தமிழ்நாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டி 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளை முட்டி 18 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் காளை முட்டி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். எனினும் காளைகள் வரக்கூடிய பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி, சிறுவர்கள் கூட்டமாக நின்று ஜல்லிக்கட்டை பார்த்து வந்தனர். அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த குட்டீஸ் என்பவரது 18 வயது மகன் பாலமுருகனை ,காளை ஒன்று நெஞ்சுப் பகுதியில் முட்டியது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காலை முதல் எந்தவித அசம்பாவிதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

