முப்படை தளபதி மறைவு: மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மெய்யநாதன்

முப்படை தளபதி மறைவு: மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மெய்யநாதன்

முப்படை தளபதி மறைவு: மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மெய்யநாதன்
Published on

கீரமங்கலம் அரசுப் பள்ளியில், விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி படத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட ராணுவ வீரர்கள் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு விமான விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் நினைவாக பள்ளி வளாகத்தில் 13 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உயிரிழந்த ராணுவ தளபதியின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com