\
டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளரின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு

டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளரின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு

டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளரின் தாயார் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

(கோப்பு புகைப்படம்)

கொரோனா வைரஸால் டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளரின் தாயார் உயிரிழந்தார்.

தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல் பிரிவில் பணிபுரிந்து வரும் அமைச்சு பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அமைச்சு பணியாளரின் 60 வயது தாயாருக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஓமந்தூராரில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூலமாக குடும்பத்தினருக்கு பரவி உள்ளது. வீட்டு வேலைக்காரருக்கும் பரவி உள்ளது.

இந்நிலையில் தாயார் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தார். தனியார் மருத்துமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்று வந்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com