தமிழ்நாடு
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்த நபர் உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மண்ணடி தம்புத் தெருவைச் சேர்ந்த சபியுல்லா, தனது பிள்ளைகளை மெரினா நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நீந்துவதை பார்த்துக் கொண்டிருந்த சபியுல்லா, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். உடனடியாக நீச்சல் குள ஊழியர்களால் மீட்கப்பட்ட சபியுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீச்சல் குளத்தில் விழுவதற்கு முன், சபியுல்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபியுல்லாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.