டி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்

டி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்
டி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்

திருப்பூரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடலை டி.என்.ஏ பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணி திருப்பூர் மயானத்தில் நடைபெற்று வருகிறது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(25). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அவருடைய வீட்டில் இருந்து காணாமல் போய்யுள்ளார். இந்த சூழலில் 2015 ஆம் ஆண்டு திருப்பூர் துண்டுக்காடு பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று கண்டெடுகப்பட்டது. அந்த உடலுக்கு யாரும் உரிமை கோராததால் புதைக்கப்பட்டது. 

இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு தனது மகன் செல்வராஜ் காணவில்லை என அவரது தந்தை முத்துவேல் என்பவர் திருச்சுழி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 2015 ஆம் ஆண்டு திருப்பூரில் இறந்த அடையாளம் தெரியாத நபர் தன்னுடைய மகனாக இருக்கலாம் என்ற முத்துவேலின் தகவல் படி, 4 வருடத்திற்கு முன்பாக புதைக்கப்பட்ட உடல் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவரின் உடலை டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை  நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com