\
துறையூர்: ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்த மயில்கள் - காவல்துறை தீவிர விசாரணை

துறையூர்: ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்த மயில்கள் - காவல்துறை தீவிர விசாரணை

துறையூர்: ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்த மயில்கள் - காவல்துறை தீவிர விசாரணை
Published on

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆற்றுப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யாற்றுக் கரையில் மயில்கள் இறந்து கிடப்பது குறித்த தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் 6 மயில்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பல மயில்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே இறந்து கிடந்தது தெரியவந்தது. மயில்கள் உயிரிழப்புக்கு காரணம் குறித்து தெரியவந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com